டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகள்

பும்ரா சாதனை

ஜமைக்கா, ஆக.24

டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை பும்ரா படைத்தார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் அனைவரும் கை கொடுக்காத நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்களை எட்டியது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்து 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தேநீர் இடைவேளை முடிந்த பின் பிராவோவை எல்பிடபிள்யு முறையில் பும்ரா வெளியேற்றினார். பிராவோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்தியபோது, டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளை வீசி (2465 பந்துகள்) 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை பும்ரா படைத்தார்.

குறைவான பந்துகளில் 50 விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் பும்ரா 2464 பந்துகளில் 50 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்டுகளை சாய்த்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர். பும்ரா 3ம் இடத்தில் உள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of