உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் இறுதிபோட்டியில் பிவி சிந்து

புது தில்லி, ஆக.24

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ ஃபீ-வை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே இந்திய வீராங்கனை சிந்து சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை பெற்றார். மொத்தம் 40 நிமிடங்கள் பரபரப்பாக நீடித்த ஆட்டத்தின் முடிவில் சீன வீராங்கனை சென் யூ ஃபீ-வை 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி. சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of