விளையாட்டு வீரர்களுக்கு விருது அறிவிப்பு

புது தில்லி, ஆக.20

விளையாட்டு விருதுகளுக்கான வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த விருதுக்காகத் திறமையும், தகுதியும் கொண்டவர்களைத் தேர்வு செய்யும் பணி தில்லியில் நடைபெற்று வந்தது. 12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு, விளையாட்டு வீரர்களின் பெயர்களை விருதுக்காகப் பரிந்துரைத்தது. இன்று, விளையாட்டு விருதுகளுக்கான வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜொலித்த தீபா மாலிக் (48), மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா ஆகியோர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உள்பட 19 விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜடேஜா (கிரிக்கெட்), தஜிந்தர் பால் (தடகளம்), முகமது அனாஸ் (தடகளம்), பாஸ்கரன் (பாடி பில்டிங்), சிங்லென்சனா சிங் (ஹாக்கி), அஜய் தாக்குர் (கபடி), கெளரவ் சிங் (மோட்டோர் ஸ்போர்ட்ஸ்), சோனியா லதர் (குத்துச்சண்டை), பிரமோத் பகத் (பாரா விளையாட்டு, பாட்மிண்டன்), அஞ்ஜும் மொட்கில் (துப்பாக்கிச் சுடுதல்), ஹர்மீத் ரஜுல் (டேபிள் டென்னிஸ்), பூஜா தண்டா (மல்யுத்தம்), பெளவாட் மிர்சா (குதிரையேற்ற பந்தயம்), குர்ப்ரீத் சிங் (கால்பந்து), பூணம் யாதவ் (கிரிக்கெட்), ஸ்வப்னா பர்மன் (தடகளம்), சுந்தர் சிங் (பாரா விளையாட்டு, தடகளம்), சாய் பிரணீத் (பாட்மிண்டன்), சிம்ரன் சிங் (போலோ)

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of