ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 வருடமாக குறைப்பு

புது தில்லி, ஆக.20

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதை 7 வருடமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். கேரளாவைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கை நடத்தி, குற்றமற்றவர் என்று நிரூபித்தார். ஆனால், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.

தற்போது உச்சநீதிமன்றத்தால் பிசிசிஐ-க்கு விசாரணை அதிகாரியாக முன்னாள் நீதிபதி டிகே ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடையை 7 வருடங்களாக குறைத்தார். ஸ்ரீசாந்துக்கு 2013-ல் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் அவர் மீதான தடை முடிவடைகிறது. அதன்பின் அவர் விளையாடலாம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of