தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா?

உச்சநீதிமன்றம் கேள்வி

புது தில்லி, ஆக.20

தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சென்னை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தீபக் குப்பா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேஸ்புக் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல், பல்வேறு வாதங்களை முன்வைத்தார். சமூக வலைதளங்களை நல்லெண்ண அடிப்படையில்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் கருத்துக்கள் எளிமையாக மக்களுக்கு சென்றடைகிறது என்றார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், புளூ வேல் கேம்-மிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை இதற்கும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் குற்றங்களை தடுக்க ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? கேள்வி எழுப்பியதுடன், வழக்கு தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளும், மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of