3 மாதங்களுக்குள் மழை நீர் சேகரிப்பை நிறுவ வேண்டும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

சென்னை, ஆக.19

அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் அடுத்த 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் என அனைத்து விதமான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of