10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, ஆக.17

10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையோ மிக கன மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of