நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக.16

கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கூடலூர் பகுதியில் நிலச்சரிவுகள், சாலைகள் துண்டிப்பு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் போதாது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கன மழையால் வெள்ள அபாயம், மண் சரிவுகள் போன்ற இயற்கை அழிவுகள் ஏற்படாமல் இருக்க வல்லுநர் குழு அமைத்து உரிய புதிய திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of