3-வது நடுவர் நோ-பால் வழங்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வருகிறது: ஐசிசி

துபாய், ஆக.7

3-வது நடுவர் நோ-பால் வழங்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

கள நடுவர்கள் மட்டுமே இதுவரை நோ-பால் வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது. இனிமேல் 3-வது நடுவர் நோ-பால் வழங்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

கிரிக்கெட் போட்டியில் ரன்அவுட், எல்பிடபிள்யூ ஆகிய முடிவுகளில் 3-வது நடுவரை நாடும் நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் பந்து வீச்சாளர் நோ-பால் வீசுவதை கள நடுவர் மட்டுமே கணித்து முடிவு தெரிவிக்க வேண்டும். சில நேரங்களில் பந்து வீச்சாளர்களின் கால் க்ரீஸை விட்டு வெகுதூரம் வெளியே வந்த போதிலும், நடுவர்கள் அதை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் நோ-பால் முடிவு போட்டியின் வெற்றித் தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. இதனால் 3-வது நடுவர் நோ-பால் முடிவை அறிவிக்கும் தொழில் நுட்பத்தை ஐசிசி கொண்டு வந்தது. இன்று முதல் ஆறு மாதங்கள் நடைபெறும் கிரிக்கெட்டில் சோதனை அடிப்படையில் நடைமுறை படுத்தப்படும். அதன்பின் அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட்டில் சேர்க்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of